Flower business! : பூக்களை ரோட்டில் கொட்டிய வியாபாரிகள்! உசிலம்பட்டியில் சாலை மறியல்!

0
69

பூ வியாபாரம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கமிஷன் மண்டி நல உரிமையாளர் சங்கத்தினர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் பூக்கள் வியாபாரம் செய்து கடைகளுக்கு வாடகை செலுத்தி வருகின்றனர்.

டெண்டர்

நாள்தோறும் நடைபெறும் பூ வியாபாரிகள், பூ விற்பனையாளர்கள் நடத்தி வரும் சுமார் 200 கடைகளை உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மறு வாடகைக்கு டெண்டர் விடுவதாக அறிவித்துள்ளார்.

போராட்டம்

வியாழக்கிழமை காலை உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பாக, நாள்தோறும் நடைபெறும் சந்தையில் இருக்கும் சுமார் 200 கடைகளின் மலர், பூ வியாபாரிகள், உரிமையாளர்கள் பூக்களை நடுரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததில் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here