Minister Siva.V.Meyyanathan! : நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்!

0
83

நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் ஊராட்சியில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 200 விவசாயிகளுக்கு விதைகள், மரக்கன்றுகள், மருந்து தெளிப்பான் போன்ற நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

குழுக்கள்

மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 85 ஊராட்சிகளில் 1,002 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 68 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஆழ்குழாய் கிணறு வசதி ஏற்படுத்துதல், விதைகள் வழங்குதல் போன்றவை செயல்பட உள்ளதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here