ஒரு காலத்தில் இந்தி மொழிகளில் இருந்து அதிக திரைப்படங்கள் தமிழுக்கு ரீமேக் செய்யப்படடு வந்த நிலையில் இப்போது தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யும் டிரெண்ட் வந்துள்ளது.
யு டர்ன்
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் யு டர்ன் . சமந்தாவின் நடிப்பில் பாலகுமாரன் இயக்கத்தில் இந்த படம் த்ரில் படமாக எடுக்கப்பட்டது. இப் படத்தில் ஹிந்தி ரீமேக்கில் ஆல்யா எஃப் நடிக்கிறார்.
சூரரைப் போற்று
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று கோபிநாத்தின் கதையை தழுவி திரைப்படம் வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது. சூரரைப் போற்று திரைப்படம் சர்வதேச அளவில் அனைவரையும் ஈர்த்தது இயக்குநர் கொங்கரா இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் .
விக்ரம் வேதா
மாதவன் மற்றும் சேதுபதி இவர்கள் நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தின் இயக்கியிருந்தார் காயத்திரி . போலீஸ் மற்றும் வில்லன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்து படம் பெரிய வெற்றியை பெற்றது. ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் படத்தில் ரோஷனும், மாதவன் நடிக்கிறார்கள்.
அருவி
எய்ட்ஸ் நோய் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அருவி. அருண் பிரபு குறைந்த பட்ஜெட்டில் எடுத்த இந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்றது இந்தியில் இயக்குநர் ஈ நிவாஸ் இப்படத்தை இயக்க உள்ளனர்.
மாஸ்டர்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாஸ்டர். விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடித்தார் வசூலிலும் சாதனை படைத்த திரைப்படம் ஹிந்தி ரீமேக் செய்யப்படுகிறது ஹிந்தி செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
கைதி
கார்த்தி மற்றும் லோகேஷ் கூட்டணியில் வெளியானஇப் படம் கைதி இரவில் நடக்கும் கதையை வைத்து எடுக்கப்பட்ட படம் செம ஹிட் கொடுத்தது ஹிந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கன் நடிக்க உள்ளார்.