Mp4 Movie 2022; வெல்வெட் நகரம் _ திரைக்கதை

0
99
வரலட்சுமி

நடிகர் : நடிகர் இல்லை
நடிகை : வரலட்சுமி
இயக்குனர்: மனோஜ் குமார் நடராஜன்
இசை : அச்சுராஜாமணி, சரண் ராகவன்
ஓளிப்பதிவு: பகத் குமார்

கஸ்தூரி

நடிகையாக இருக்கும் கஸ்தூரி, மலை வாழ் மக்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்கள் மலையின் பகுதியில் கம்பெனி ஆரம்பிப்பதற்காக தீ வைத்து வாழும் மக்களை விரட்ட முயற்சி செய்கிறார்கள் . தீ இயற்கையாக வரவில்லை, யாரோ செய்த வேலை என்று தெரிந்துகொண்ட கஸ்தூரி ஆவணங்களை ரெடி பண்ணி ரிப்போர்ட்டராக இருக்கும் வரலட்சுமியிடம் கொடுக்க இருக்கிறார்.

கஸ்தூரியை கொலை செய்தது யார்

இந்நிலையில், மர்ம நபரால் கஸ்தூரி கொலை செய்யப்படுகிறார். இதனை தெரிந்து கொண்ட வரலட்சுமி, கஸ்தூரி கொடுத்த ஆவணங்களை எடுத்து மலை வாழ் மக்களுக்கு நியாயம் காணவும், அவளை கொலை செய்தது யார் என்பதையும் கண்டறிய முயற்சி செய்கிறார். அப்போது தீடிரென திருட்டு கும்பலிடம் வரலட்சுமி மாட்டுகிறார்.

வரலட்சுமி

இறுதியில் பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து வரலட்சுமி தப்பித்தாரா? ஆவணங்களை கைப்பற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் ரிப்போர்ட்டராக இருக்கும் வரலட்சுமி, தனக்கு கொடுத்துள்ள வேடத்தை உணர்ந்து பிரமாதமாக நடித்துள்ளார். படத்தின் நாயகியாக இல்லாமல் வேறு நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து நடித்துள்ளார்.

வெல்வெட் நகரம்

காமெடி நடிகராக வலம் வந்த ரமேஷ் திலக் இப்படத்தில் நல்லவரா, கெட்டவரா என்று சிந்திக்க வைத்திருக்கிறார். பாடகி மாளவிகா சுந்தர், இந்த படத்தின் அவரது நடிப்பால் மக்களை ஈர்த்துள்ளார் .

திரைக்கதை

வித்தியாசமான கதையை கையில் எடுத்த இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களை உட்கார வைத்திருக்கிறார்.

சுமாரான நகரம்

பகத் குமாரின் ஒளிப்பதிவும், சரண் ராகவனின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் துணையாக அமைந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here