Music Director D.Imman! : இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் குறித்து டுவிட்டரில் வெளியிட்ட தகவல்!

0
112

டி.இமான்

இவர் 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி பிறந்தார். இவரின் தற்போதைய வயது 39 ஆகும். இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். இவர் ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல துறையில் பணியாற்றியவர். அவரது முதல் படம் தமிழன், அதனை தொடர்ந்து 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

திருமணம்

2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டை முதலில் திருமணம் செய்து கொண்டார் இமான். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. மோனிகாவை விவாகரத்து செய்துவிட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார்.

மறுமணம்

விளம்பர டிசைனர் உபால்டுவின் மகள் அமலியை இவர் சமீபத்தில் மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் இமானின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டார்கள். இமானின் மறுமணத்திற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

டுவிட்டரில் கூறியவை

மே 15 அன்று அமலியை மறுமணம் செய்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய கடினமான நேரங்களில் என்னுடன் இருந்த தந்தை டேவிடுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். கடந்த சில வருடங்களாக நானும் என் குடும்பத்தினரும் எதிர்கொண்ட சவால்களுக்கு இந்த திருமணம் பெரிய தீர்வாக உள்ளது.

மகிழ்ச்சி

அருமையான மனிதரான அமலியை அடைய காரணமாக இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். அமலியின் மகள் நேத்ரா எனக்கு 3ஆவது மகள். நேத்ராவின் தந்தையானதற்கு எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அன்பான மகள்களான வெரோனிகா, பிளெஸிகா ஆகியோர் இல்லாதது தனிப்பட்ட முறையில் வருத்தத்தை அளித்ததாக கூறியுள்ளார். அவர்களை வரவேற்க காத்திருப்பதாக கூறி திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here