Robbery! : பூஜை செய்து நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியில் ஊழியர்கள்!

0
93

நிதி நிறுவனம்

கேரள மாநிலம் கொல்லம் அருகே பத்தனாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நாயர். இவர் அங்குள்ள ஜனதா சந்திப்பு பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 6 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

அதிர்ச்சி

சனிக்கிழமை பிற்பகலில் இந்த நிறுவனத்திற்கு விடுமுறையாகும். நேற்று காலை நிறுவனத்தை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தபோது முன்பக்கம் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த ஊழியர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணை

இதனை குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நிறுவனத்திலிருந்து 100 பவுன் நகைகள், ரூபாய் 4 லட்சம் கொள்ளையடிக்க பட்டுள்ளது. அங்கிருந்த ஒரு அறையில் பிளாஸ்டிக் இலைகளில் மது, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம் பழத்தில் சூலம் குத்திவைக்கப்பட்ட நிலையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பூஜை

கும்பிடும் ஒரு கடவுளின் புகைப்படமும் இலையில் வைக்கப்பட்டுள்ளதால் கொள்ளையடிப்பதற்கு முன்பு திருடர்கள் பூஜை நடத்தி இருக்கலாம் என்று கருதுகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த கும்பல்தான் இந்த கொள்ளையினை நடத்தியுள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.

வழக்கு

இந்த நிதி நிறுவனமானது மூன்று மாடி கட்டிடத்தில் 2 ஆவது மாடியில் உள்ளது. 3ஆவது மாடி வழியாக கும்பல் 2ஆவது மாடிக்கு வந்துள்ளனர். இதனை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here