Natural gas prices! : இருமடங்காக உயர்ந்துள்ள இயற்கை எரிவாயு விலை!

0
68

மத்திய அரசு

மின்சாரம், உரம், சிஎன்ஜி வாயு, குழாய்வழியாக வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு போன்றவற்றின் உற்பத்திகளுக்கு இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த இயற்கை எரிவாயு விலையினை 6 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசானது நிர்ணயிக்கிறது.

விலை உயர்வு

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான 6 மாதத்திற்கு பெட்ரோலிய அமைச்சகம் நேற்று விலையை கடுமையாக உயர்த்தி உள்ளது. மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 2.90 டாலராக இருந்து வந்த அதன் விலையை 6.10 டாலராக உயர்த்தி உள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது இரு மடங்கிற்கு மேல் விலையானது உயர்கிறது.

வயல்கள்

பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி க்கு சொந்தமான பழைய எண்ணெய் வயல்கள் உள்ளன. அங்கு எடுக்கப்படும் இந்த இயற்கை எரிவாயுவிற்கு விலை உயர்வானது பொருந்தும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் வயல்களில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையானது 6.13 டாலரில் இருந்து 9.92 டாலராக உயர்கிறது.

சமையல் எரிவாயு

சிஎன்ஜி எரிவாயு, வீடுகளுக்கு குழாய்வழியாக வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலை 15 சதவீதம்வரை உயரும் என தெரிகிறது. இதன் மூலம் மின்சாரம், உரம் ஆகியவற்றின் உற்பத்தி செலவுகள் உயரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here