Nayanthara-Vignesh Sivan! : நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிகளின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய பிரபல நடிகை!

0
73

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களின் திருமணம் குறித்து ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நட்சத்திர ஜோடி

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர். இந்த ஜோடியின் திருமணம் வரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ்

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நயன்தாராவிடம் உங்களின் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி தானா என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.
விளையாட்டாக கேட்டாலும் அது தான் அவர்கள் திருமண தேதி என நம்பப்படுகிறது. இந்த திருமணத்தில் திரையுலக நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here