Sunday, October 2, 2022
Home Blog

Internet speed: உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகம் அதிகரிக்க இதை செய்தால் போதும்!

0

டேட்டா

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஸ்மார்ட்போனில் டேட்டா என்பது முக்கிய பங்கினை வகிக்கிறது. தற்போதைய காலத்தில் டேட்டா கனெக்சன் இல்லாமல் ஒரு நாளை கடப்பது கூட அனைவருக்கும் சிரமமாகவே உள்ளது.

பயனர்கள்

ஸ்மார்ட்போனின் டேட்டா மெதுவாகவோ, விட்டுவிட்டு இயங்கினாலோ அது பயன்படுத்துபவர்களை மிகவும் எரிச்சலடைய செய்கிறது. சில சமயங்களில் உங்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். இதனை தவிர்க்க ஸ்மார்ட்போன் டிப்ஸ் ஒன்றை பயன்படுத்தினால் போதும். உங்களுடைய டேட்டா வேகம் அதிகரித்து காணப்படும்.

முதல் டிப்ஸ்

உங்கள் ஸ்மார்ட்போனின் இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால் வேகத்தை அதிகரிக்க மொபைலின் ஏர்பிளேன் மோடை ஆன் செய்யலாம். சில நிமிடங்கள் வைத்துவிட்டு பின்னர் அதனை ஆஃப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது டேட்டா வேகத்தை அதிகரிக்க முடியும்.

இரண்டாவது டிப்ஸ்

உங்கள் மொபைலில் டேட்டா வேகத்தை அதிகரிக்க ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும். பின்னர் மொபைல் டேட்டா என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் காண்பிக்கப்படும் 2G/3G/4G Auto என்பதை தேர்வு செய்தால் டேட்டா வேகம் அதிகரிக்கும்.

மூன்றாவது டிப்ஸ்

உங்கள் சிம் கார்டின் மூலம் டேட்டா ஸ்பீடை அதிகரிக்க முடியும். சிம் கார்டில் சில சமயம் தூசிகள் படிந்திருக்கும். சிம் கார்டை சுத்தம் செய்வதன் மூலமாகவும் டேட்டா ஸ்பீடு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

Actress Shreya: இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரேயா! கவர்ச்சி பொங்கும் அழகிய பிக்ஸ்!

0

நடிகை ஸ்ரேயா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இப்போதும் அவர் அழகாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சி குயின்

மழை படத்தில் அவர் எவ்வளவு கிளாமராக வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அப்பொழுது அவர் எப்படி இருந்தாரோ அதே போல் இன்றும் இருக்கிறார் கவர்ச்சி குயின் ஸ்ரேயா. கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

த்ரிஷ்யம் 2

ஹிந்தியில் அஜய் தேவ்கன் உடன் த்ரிஷ்யம் படத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. அதனை தொடர்ந்து வந்த த்ரிஷ்யம் 2 படத்திலும் நடித்துள்ளார். அதன் டிரைலர் வெளியாகி உள்ளது. ஸ்ரேயா கருப்பு நிற கவர்ச்சி உடையில் பதிவிட்ட புகைப்படங்கள் அவரை பிரபலமாக்கி வருகிறது.

பிற நடிகைகளுடன் போட்டி

அவர் கவர்ச்சி குயின் என்பதை இன்றும் நிரூபித்து பிற இளம் நடிகைகளுக்கு போட்டியாக வருகிறார் ஸ்ரேயா. தற்போது அவர் வீட்டின் கிட்சன் பகுதியில் இருந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை மயக்கி வருகிறது.

பிகினி உடை

குடும்பத்துடன் ஸ்ரேயா மாலத்தீவுக்கு சென்றிருந்தார். அங்கு அவருடைய மகளுடன் பிகினி உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் அனைவரையும் கவர வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் நடிகைகளை பொறாமை பட வைத்துள்ளது.

காப்ஸா

ஸ்ரேயா கன்னட படமான காப்ஸா என்பதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகி ட்ரெண்டான ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்திருந்தார். தற்போது பல படங்களில் நடித்து பிஸியாக உள்ளார்.

Zodiac signs: ஆஹா.. இந்த ராசிகர்களுக்கு இவ்வளவு நன்மையா.! சனி பகவான் மாற்றத்தால் குஷியாகும் சில ராசிகள்!

0

சனி பகவான்

ஜோதிடத்தின் படி அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிலையில் இருந்து மாற உள்ளார். சனி பகவானின் இந்த மாற்றம் தன்தேரஸ் சுப நாளில் நடக்கவுள்ளது. தீபாவளி வேளையில் கிரகங்களின் நிலை மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

மாற்றம்

இந்த ஆண்டு தீபாவளி நேரத்தில் சனி மாற்றம் செய்வதால் 12 ராசிகளையும் பாதிக்கும். சில ராசிகளுக்கு இதனால் மோசமான நிலைகள் ஏற்படலாம். சில ராசிகளுக்கு இந்த மாற்றத்தால் நல்ல பலன்களும் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ராசிகளை இங்கு பார்ப்போம்.

மேஷம்

சனி பகவானின் மாற்றம் மேஷ ராசிகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது. இதனால் மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சிறந்த பலன்களை பெறலாம். பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முன்னேற்றம் அடைய இது சிறந்த நேரம் ஆகும்.

துலாம்

உங்களுக்கு தீபாளியில் நல்ல செய்திகள் கிடைக்க போகிறது. உங்களுக்கு இதனால் திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.தங்கம் வாங்கும் நன்மைகள் கிடைக்க போகும் நல்ல நேரம் இது ஆகும். நீங்கள் இப்போது செய்யும் முதலீட்டிற்கு எதிர்காலத்தில் நல்ல லாபம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

சிம்மம்

சனியின் மாற்றத்தால் உங்களுக்கு முழுமையாக பலன்கள் கிடைத்தாலும், நீங்கள் இந்த நேரத்தில் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்க போகும் நேரம் இதுவாகும்.

விருச்சிகம்

சனி பகவானின் மாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உங்களுக்கு ஏற்படும். உங்களுக்கு சகோதர்கள் நல்ல ஆதரவு அளிப்பர். வருமானங்கள் திடீரென உயரும் வாய்ப்புகள் உள்ளது. தொழில் சம்மந்தமான அனைத்தும் வெற்றியடையும்.

மீனம்

சனி பகவானின் மாற்றத்தால் தீபாவளியில் உங்களுக்கு அதிகப்படியான நன்மைகள் நடைபெறும். தொழில் சமந்தமாக எது செய்தாலும் உங்களுக்கு சிறப்பாக அமையும் நேரம் இது. இந்த நேரத்தில் உங்களுக்கு உறவினர்கள், நண்பர்களின் பரிபூரணமான ஆதரவுகள் கிடைக்கும்.

NoorDung Electric Bike: 60 கிமீ மைலேஜ் கொண்ட நூர்துங் எலக்ட்ரிக் பைக் சிறப்பம்சங்கள்!

0

எலக்ட்ரிக் பைக்

தற்போதைய காலகட்டத்தில் எலக்ட்ரிக் பைக்குகள் அனைவரும் விரும்பும் ஒன்றாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலைகளும் உயர்ந்து வரும் இந்த காலத்தில் எலக்ட்ரிக் பைக்குகளை பலர் வாங்கி வருகிறார்கள். இதனால் சுற்றுசூழலுக்கும் நன்மை ஏற்படுகிறது. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். பல நிறுவனங்கள் புதிதுபுதிதாக வாகனங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

நூர்துங்

இதன் வடிவமைப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளன. நூர்துங் எலக்ட்ரிக் பைக் பல சிறந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பைக்கின் தரமும் சிறப்பாக உள்ளது. இது சமீபத்தில் நடைபெற்ற யூரோபைக் 2022 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அம்சங்கள்

நூர்துங் என்ற மின்சார பைக்கில் காற்று மாசுபாடு சென்சார், ப்ளூடூத் இணைக்கப்பட்ட ஸ்பீக்கர், பூம் பாக்ஸ் பவர் பேங்க் போன்ற அம்சங்கள் காணப்படுகின்றன. இந்த மின்சார பைக்கின் வடிவமைப்பும் மிகவும் அழகாக உள்ளது.

சார்ஜிங்

பல சிறப்பான அம்சங்களை கொண்ட இந்த பைக்கினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும். பூம்பாக்ஸுடன் சுமார் 20.8 கிலோ எடை கொண்டுள்ளதால், மிகவும் லேசான பைக்காக இது உள்ளது. இந்த பைக்கில் கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட பிரேம் உள்ளதால் யார் வேண்டுமானாலும் இதனை எளிதாக இயக்க முடியும்.

சிறப்பான அம்சங்கள்

நீங்கள் பயணம் செய்யும் போது காற்று மாசுபாட்டை கண்டறிய காற்று மாசு சென்சார் அதன் காற்று மாசு தரவு நெட்வொர்க்கில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்பீக்கர்கள் நவீன உயர் தொழிநுட்பத்துடன் வருகிறது. பட்டன்களை பயன்படுத்தி பைக்கை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

பேட்டரி அம்சம்

இந்த நூர்துங் பைக்கில் 300Wh பேட்டரி உள்ளதால் இது 60 கிலோமீட்டர் வரை செல்லும் வாய்ப்புக்கள் உள்ளது. இதனை 100W சார்ஜர் மூலம் மூன்று மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

விலை

முன்கூட்டியே ஆர்டர் செய்பவர்களுக்கு தற்போது நூர்துங் எலக்ட்ரிக் பைக் கிடைக்கிறது. இது €6,990 க்கு கிடைக்கிறது. தோராயமாக இந்திய மதிப்பில் ரூபாய் 5,50,352 க்கு கிடைக்கிறது.

5G service: இனி இன்டர்நெட் பற்றிய கவலைகள் வேண்டாம்! இன்று முதல் இந்தியாவில் 5ஜி சேவைகள்!

0

5ஜி சேவை

இந்தியாவில் 5ஜி சேவைகள் வெளியிடப்பட்டால் நெட்ஒர்க்கில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் 5ஜி சேவைகள் பொதுமக்களுக்கு தேவையான ஒன்றாக உள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

இன்றைய தினம் முதல் இந்தியாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவைகள் குறித்து பிரதமர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். முதலில் இந்த சேவையானது முக்கிய நகரங்களில் மட்டும் அறிமுகமாக உள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த சேவை நாடு முழுவதும் தொடங்கப்படும். மேலும் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 1-4 வரை இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 இன் 6 ஆவது பதிப்பையும் தொடங்கி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பார்ப்பு

இந்த அதிவேக இணைய சேவையானது நாட்டை மாற்றும் சக்தியாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2035 ஆம் ஆண்டில் 5ஜி விளைவுகள் செலவு $450 பில்லியன்களை எட்டும் என கூறப்படுகிறது. இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியாவின் தொழில்நுட்பத்தை இது மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகம்

இது 4ஜி வழங்கும் வேகத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும். வேகமான இணையத்திற்கான சிறிய, நடுத்தர வணிகர்களிடம் இருந்து புதிய யோசனைகளை இது ஊக்குவிக்கும். “டிஜிட்டல் இந்தியா” இலக்கை அடைய இது உதவும். இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், செயற்கை நுண்ணறிவு, மெஷின்-டு மெஷின் கம்யூனிகேஷன் போன்றவற்றை இது சாத்தியமாக்கும். இது எதிர்பார்க்கப்படும் நன்மைகளில் ஒன்றாகும்.

Cylinder Price: குறைந்து வரும் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை! காரணம் என்ன தெரியுமா?

0

சிலிண்டர்

வீடுகளில் சமைக்க பயன்படும் சாதனம் சிலிண்டர். இது தற்போது அனைத்து வீடுகளிலும் காணப்படுகிறது. இன்றைய அவசர காலகட்டத்தில் சிலிண்டர் முக்கிய அத்தியாவசிய பொருளாக உள்ளது. இது குறித்து தற்போது இல்லத்தரசிகளுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.

நிறுவனங்கள்

வீட்டு உபயோகத்திற்கும், வர்த்தக பயன்பாட்டிற்கும் பயன்படும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறார்கள். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய்

உக்ரைன், ரஷ்யா இடையே போர் நிலவி வந்ததன் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்து காணப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படுகிறது.

சிலிண்டர் விலை

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தற்போது குறைந்துள்ளது. 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலையை ரூபாய் 25.50 க்கு குறைத்துள்ளன. இதனால் சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை 2,045 ரூபாயில் இருந்து ரூபாய் 2,009.50 ஆக குறைந்துள்ளது. டெல்லியில் 1,885 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது 1,859 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Prime Minister: பிரதமர் செய்த செயலை பாருங்க.! வைரலாகும் வீடியோ பதிவு!

0

பிரதமர் மோடி

பாரத ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதியான இவர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் PM kisan என்ற திட்டத்தையும் வழங்கி வருகிறார்.

பணிகள்

பிரதமர் மோடி அகமதாபாத்தில் மேம்பாட்டு திட்டங்கள் தொடங்க சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கிருந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு காந்திநகரில் இருக்கும் ராஜ் பவனுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆம்புலன்ஸ்

பிரதமர் வந்துகொண்டிருந்த வழியில் திடீரென ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. அப்போது பிரதமரின் அறிவுரைப்படி ஆம்புலன்சுக்கு பிரதமர் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வழிவிட்டுள்ளனர். அந்த வீடியோவினை குஜராத் மாநில பாரத ஜனதா கட்சி அவர்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

தொடங்கி வைத்த பணி

அவர்கள் வெளியிட்ட வீடியோவில் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு பிரதமர் வாகனம் பின்னர் செல்வது தெரிகிறது. பிரதமர் மோடி பின்னர் காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் ஒரு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? சாதனை படைத்த வசூல் வேட்டை!

0

இயக்கம்

நேற்றைய தினம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படம் 500கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதனை லைகா புரொடக்ஷ்ன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தரியாரித்துள்ளது.

நடிகர்கள்

இந்த படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ஒரு வரலாற்று சித்திரம் ஆகும்.

புத்தக பிரியர்கள்

அமர் கல்கியின் புத்தகம் ஒன்றில் பொன்னியின் செல்வன் கதை உள்ளது. இதனை பல புத்தக பிரியர்கள் படித்துள்ளனர். இந்த நாவலை படித்த பல புத்தக பிரியர்கள் படத்தினை பார்க்க ஆர்வத்துடன் டிக்கெட்டை வாங்கி வந்துள்ளனர். இதன் காரணமாக பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை அமோகமாக இருந்துள்ளது.

ரசிகர்களின் கொண்டாட்டம்

நேற்றைய தினம் காலை 4.30 மணியளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் மேளதாளத்துடன் பேனர்களை ஏந்தி படத்தினை பார்த்துள்ளனர். நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களுடன் சேர்ந்து திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த அனைவரும் பாசிடிவ் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு நாள் வசூல்

இந்த திரைப்படம் தமிழகத்தில் 800 திரையரங்குகளிலும், ஆந்திரா, தெலுங்கானாவில் 550 திரைகளிலும் திரையிடப்பட்டது. தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் இதன் வசூல் ரூபாய் 25 -30 கோடி என்றும், உலகம் முழுவதுமாக 40 கோடி வரை வசூலாகி சாதனை படைத்துள்ளது.

Aditi Shankar: மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அதிதி ஷங்கரின் கலக்கல் போட்டோஸ்!

0

முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர்.

அந்த படத்தில் ஒரு பாடலும் பின்னணி பாடியுள்ளார்.

இவர் பிரபல இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் ஆவார்.

இவர் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

நவராத்திரி முதல் நாள் இவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் இளவரசியாக காட்சியளிக்கிறார்.

இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

Actress Meena: நடிகை மீனாவின் கனவு என்ன தெரியுமா? இன்ஸ்டாவில் ஓப்பனாக பதிவிட்ட மீனா!

0

பொன்னியின் செல்வன்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. திரையுலக பிரபலங்கள் அனைவரும் இந்த படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மீனாவின் பதிவு

பொன்னியின் செல்வன் படம் குறித்து நடிகை மீனா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்திக், ஜெயம் ரவி, பார்த்திபன்,திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

மீனாவின் கனவு

நடிகை மீனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய கனவு என குறிப்பிட்டுள்ளார். மீனா, நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தனக்கு மிகவும் பொறாமையாக உள்ளதாக பதிவு செய்துள்ளார்.

வாழ்த்துக்கள்

முதன்முதலாக அவரை பார்த்து பொறாமை பட்டுள்ளதாக கூறியுள்ளார். மீனா படக்குழுவினர் அனைவருக்கும் அவருடைய சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் சிறப்பாக வரவேற்பினை பெற்று வருகிறது.