நடிகர்கள்
சில வருடங்களுக்கு முன்பு வரை அனைத்து திரையுலக நடிகர்களுமே அவர்களுடைய திரையுலகம் சார்ந்த கதைக்களங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா முதலான படங்களின் உலகளாவிய வரவேற்பு அனைத்து நடிகர்களையும் மாற்றியது,

ஆர்ஆர்ஆர்
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் அதே பாணியில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ளது. இதில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் அனைத்து மொழிகளின் நிகழ்விலும் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தினார்கள்.

புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா படமும் அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பிறகு அனைத்து நடிகர்களின் படங்களும் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தெலுங்கு சினிமா
தெலுங்கு நடிகரான ரவி தேஜா வேறு ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு டைகர் நாகேஸ்வரராவ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என பன் மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி இயக்க உள்ளார். நேற்றைய தினம் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது.