Pakistan vs Australia! : பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையேயான தொடரில் வீரர்கள் நிதான பேட்டிங்!

0
136

போட்டி

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவான நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

ரன்கள்

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களை அடித்தது. தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அபாரமாக பேட்டிங் ஆடி 91 ரன்களை அடித்தார். ஸ்மித் என்பவர் 59 ரன்களை அடித்துள்ளார். அதன் பிறகு அலெக்ஸ் கேரி 67 ரன்களையும், கேமரூன் கிரீன் என்பவர் 79 ரன்களையும் எடுத்துள்ளார்.

ஆட்டம்

இரண்டாம் நாள் தொடங்கிய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 39 ஒவர்கள் பேட்டிங் ஆடியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் 11 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக்கும், அசார் அலியும் இணைந்து நிதானமாக ஆடிவருகின்றனர்.

களம்

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் மொத்தம் அடித்துள்ளது. அப்துல்லா ஷாஃபிக் 45 ரன்கள், அசார் அலி 30 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here