Wednesday, May 18, 2022
HomecricketPakistan vs Australia! : இரண்டாவது ஒருநாள் போட்டியில் பல சாதனைகளை படைத்து பாகிஸ்தான் வெற்றி!

Pakistan vs Australia! : இரண்டாவது ஒருநாள் போட்டியில் பல சாதனைகளை படைத்து பாகிஸ்தான் வெற்றி!

வெற்றி

லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றது.

சமன்

இமான் உல் ஹக் 108 பந்துகளில் 104 பந்துகளை விளாச, கேப்டன் பாபர் அசாம் 73 பந்துகளில் சதமெடுத்து 83 பந்துகளில் 114 என்ற வெறியாட்டம் ஆட 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றில் வெற்றிகரமாக விரட்டிய அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னர் அதிகபட்சமாக இலக்கை விரட்டி வெற்றி பெற்றது 316 ரன்கள் ஆகும். இதில் பாபர் அசாம் 83பந்து 114 ரன்களில் 11 பவுண்டரி, 1 சிக்ஸ் விளாசியுள்ளார்.

ரன்கள்

விரட்டலின் போது இமான் உல் ஹக் ஜோடி 118 ரன்கள் என்ற சதக்கூட்டணி அடித்தளம் அமைத்து கொடுக்க 229/1 என்ற பாகிஸ்தான் ஸ்கோர் இருந்த போது 34.1ஓவர் ஆகியிருந்தது. இமான் உல் ஹக் 106 ரன்களில் ஆட்டத்தினை இழந்தார்.

கூட்டணி

பாபர் அசாம், இமாம் உல் ஹக் கூட்டணி 111 ரன்களை 16 ஓவர்களில் சேர்த்த சமயத்தில் இருவரும் சேர்ந்து அடுத்த 10 ஓவர்களில் இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார். பின் பாபர் அசாம், ரிஷ்வான் இணைந்ததில் பாபர் அசாம் வெளுத்துக் கட்டினார். இருவரும் சேர்ந்து 10 ஓவர்களில் 80 ரன்கள் கூட்டணியினை அமைத்தனர். இதில் அதிகமாக ஸ்கோர் எடுத்தது பாபர் அசாம் தான்.

சாதனை

ஆஸ்திரேலியா பவுலிங்கும் ஏ அணி பவுலிங் ஆகும். இமாம் உல் ஹக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 2 சதங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

பாபர் அசாம்

348 ரன்கள் இலக்கை சேஸ் செய்வதென்பது சிறப்பான ஒன்றாகும். பாபர் அசாம் இதனை வரலாற்று சேசிங் ஆக்கி வெற்றி பெற்றுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments