College student! : கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி விஷம் அருந்தவைத்ததாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு! மாணவியின் உடலை வாங்க மறுப்பு!

0
102

வித்யா லட்சுமி

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் வித்யா லட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 12 ஆம் தேதி வீட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவியின் உடலில் விஷம் இருந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாக்குமூலம்

மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், இளைஞர் ஒருவர் அவரை காதலிப்பதாக கூறி பின் தொடர்ந்து வந்ததாகவும், காதலிக்க மறுத்ததால் நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக ஒன்றை குடிக்க கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அதனை குடித்த பிறகு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

விசாரணை

இதில் சம்மந்தப்பட்ட 18 வயது இளைஞர் கரண் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர்கள், குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் உடன்பாடு இல்லாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்ட எஸ்.பி பேட்டி

மாணவி வித்யாலட்சுமி கடந்த 12 ஆம் தேதி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். காவல்துறை விசாரணை நடத்திய போது அவரை வற்புறுத்தி விஷம் கொடுக்கவில்லை என காவல்துறையிடம் கூறியுள்ளார். மாணவியின் உடல் பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இவருடைய மரணம் சந்தேகத்திற்குரிய மரணம் என போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

கைது

காவல் துறையினரிடம் கேட்ட பொழுது மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், உண்மை தன்மையை பொறுத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர். கரண் என்ற இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here