Property tax: சொத்துவரி செலுத்த தவறினால் அபராதம்! கடைசி தேதி உங்களுக்கு தெரியுமா?

0
41

சொத்து வரி

சொத்துவரி என்பது ஒருவர் வைத்திருக்கும் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரியாகும். ஒருவர் வைத்திருக்கும் நிலம், நிலத்தில் உள்ள எல்லாவகை பொருள்கள் மீதும் வரியானது விதிக்கப்படும். இந்த வரியை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகத்திலும், சொத்துவரி செலுத்தும் இடங்களிலும் பணமாக செலுத்த முடியும்.

அபராதம்

சென்னையில் நடப்பு நிதியாண்டில் 52 விழுக்காட்டினர் மட்டுமே சொத்துவரி செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இதுவரை வரி செலுத்தாதவர்கள் செலுத்த தவறினால் நிர்வாகம் அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது.

செலுத்தப்பட்டுள்ள வரி

நடந்து வரும் நிதியாண்டில் முதல் அரையாண்டிற்கான சொத்துவரி செலுத்த செப்டம்பர் 30 கடைசியாக கருதப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் செலுத்த வேண்டியதற்கு மொத்தம் 6 லட்சத்து 88 ஆயிரம் சொத்துக்களுக்கு மட்டும் வரியானது செலுத்தப்பட்டுள்ளது.

முதல் அரையாண்டு

சென்னை மாநகராட்சி நிர்வாகம் 570கோடி ரூபாய் முதல் அரையாண்டில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. முதலில் சொத்து வரிகளை செலுத்தியோர் எண்ணிக்கை 75 விழுக்காட்டை தாண்டுவதாக சென்னை நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here