Dead fish! : ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் மக்கள் அதிர்ச்சி!

0
47

ஏரி

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவில் உள்ள மணிவிழுந்தான் கிராமம் தலைவாசல் அருகே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் எப்போதும் நீர் நிறைந்து காணப்படுவதால் நிலத்தடி நீர் வற்றாமல் இருக்க உதவுகிறது.

மீன்கள்

இந்த ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும் காலத்தில் மீன்கள் விடப்படும். கட்லா, மிருகால், ஜிலேபி, கண்ணாடி கெண்டை என பல்வேறு மீன் குஞ்சுகள் வளர்க்கப்படும். இவை வளர்ந்ததும் பிடிக்கப்பட்டு உடனுக்குடன் விற்கப்படும்.

உற்பத்தி

கடந்த ஆண்டு பெய்த கனமழையால் அந்த ஏரியில் அதிக அளவில் நீர்ப்பிடிப்பு ஏற்பட்டு மீன்கள் அனைத்தும் உற்பத்தியாகி உள்ளன. இந்த மீன்களை பிடித்து விற்பனை செய்ய அரசு அதிகாரிகள் மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது.

கோடை வெயில்

மீன்கள் உற்பத்தியாகியுள்ள இந்த நேரத்தில் கோடை வெயில் உச்சம் தொட்டுள்ளது. அதிகளவிலான வெப்பம் காரணமாக ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை நேரில் சென்று பார்க்கையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

துர்நாற்றம்

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஏரி என்பதால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதால் அந்த வழியாக பயணிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விசாரணை

இங்கு ஆலைகள் இருப்பதால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதால் மீன்கள் இறந்திருக்கலாம். இதனை குறித்து அரசு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here