Petrol-Diesel price: 32 ஆவது நாளாக மாற்றம் இல்லாமல் தொடரும் பெட்ரோல்,டீசல் விலை!

0
127

விலை நிர்ணயம்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல் , டீசல் விலையினை தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலையானது பெட்ரோல் டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.

போர்

ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடந்த போது விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தேர்தல் முடிவடைந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

திடீர் அறிவிப்பு

இந்த நிலையில் மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

இன்று

இன்றைய தினம் 32 ஆவது நாளாக பெட்ரோல் விலையானது ஒரு லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூபாய் 94.24க்கும் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here