Actress Namitha! : கர்ப்பமாகியுள்ள நடிகை நமிதா! வாழ்த்துக்களை கூறும் பிரபலங்கள்!

0
122

நமிதா

சொந்தம், பில்லா, எங்கள் அண்ணா, சிம்ஹா போன்ற பல பிரபலமான படங்களில் பணியாற்றியவர் நமிதா. நவம்பர் 2017ஆம் ஆண்டு மல்லிரெட்டி வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கடந்த ஆண்டு நான்காவது ஆண்டு நிறைவை கொண்டாடினார்கள்.

பணிகள்

ரியாலிட்டி ஷோக்கள், பிக்பாஸ் தமிழ் சீசன்1, டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நமிதா பணியாற்றியுள்ளார். 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில உறுப்பினராக பணியாற்றினார்.

தாய்மை

நடிகை நமிதா விரைவில் தாய்மையினை தழுவ போகிறார். இவர் மே 10 அவருடைய பிறந்தநாளில் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கர்ப்பமான செய்தியினை பகிர்ந்துள்ளார். தாய்மை அடைந்திருப்பதை புகைப்படங்கள் மூலம் தெரியப்படுத்தி உள்ளார்.

வாழ்த்து

நமிதாவுக்கு திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை குஷ்பு வாழ்த்துக்கள் என் அன்பே என்றும், கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் நடிகை கிகி விஜய் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here