Private train! : முதல்முறையாக தமிழகத்தில் தனியார் ரயில் சேவை!

0
146

ரயில் சேவைகள்

தமிழ்நாட்டில் முதல்முறையாக தனியார் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த எம் அண்ட் சி என்ற நிறுவனமானது கோவையில் இருந்து ஸூரடிக்கு தனியார் ஆன்மிக சுற்றுலா ரயிலை வருகிற மே 17ஆம் தேதி முதல் இயக்க உள்ளது.

கட்டணம்

கோவையில் இருந்து ஈரோடு, சேலம், பெங்களூர், மந்த்ராலயம் வழியாக செல்லும் இந்த பயணத்தில் ஒரே கட்டணத்தில் 4 நாட்களுக்கான உணவு, படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வை, தினசரி பயன்பாட்டு பொருள்கள் என அனைத்தும் வழங்கப்படும்.

வாராந்திர ரயில்

இரண்டு அடுக்கு ஏசி, உயர்தர வசதிகளை கொண்ட இந்த வாராந்திர ரயில் செவ்வாய் கோவையில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை மாலை ஷூரடி சென்றடைகிறது. வியாழக்கிழமை பாபா தரிசனம் முடிந்ததன் பிறகு வெள்ளிக்கிழமை கோவை வந்தடைகிறது.

மருத்துவர்

அவசர மருத்துவ தேவைகளுக்காக ஒரு மருத்துவர் ரயிலில் பயணம் செய்வார். பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சேவை அதிகாரி, உதவியாளர்கள் பயணிப்பர். வழிகாட்டிகள் மூலம் பயணிகளுக்கு வழிகள் காட்டப்படும்.

திட்டம்

கோவையை தொடர்ந்து சென்னை,மதுரை, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து ஆன்மிக சுற்றுலா பயண சேவையை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here