Rajinikanth! : சிவகார்த்திகேயன் நடித்த “டான்” படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!

0
61

டான் திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் டான். இதனை அறிமுக இயக்குனரான சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இதனை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

நடிகர்கள்

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

பாராட்டு

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதில், டான் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் அழைத்து பாராட்டியதாக தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது என்றும், கடைசி 30 நிமிடங்கள் அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here