Ram Temple! : அடுத்த டிசம்பர் மாதத்திற்குள் அயோத்தியில் ராமர் கோவில்! கட்டுமான குழு கமிட்டியின் அறிக்கை!

0
87

ஸ்ரீராமர் கோயில்

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோவில் கட்டும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது. கோவில் கட்டுமான குழு கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை

ராமர் கோயிலில் கிரானைட் கற்கள் கொண்டு பீடம் கட்டும் பணியானது பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீடம் கட்டுவதற்கு சுமார் 17,000 கற்கள் பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகா, ஆந்திராவில் இருந்து கற்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

கோவிலின் பணிகள்

மூன்று அடுக்குகளை கொண்ட கோவிலின் பணிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்து வருகின்றன. கருவறைக்கான பீடம் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கீழ்தளத்தில் கோவில் கருவறை பணிகள் டிசம்பர் 2023க்குள் கட்டி முடிக்கப்படும் எனவும், மீதமுள்ள பணிகள் டிசம்பர் 2024 க்குள் முடிவடையும் எனவும் கூறப்படுகிறது. கோவிலின் அடித்தளம், தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவு

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான செலவு ரூபாய் 300 கோடி முதல் 400 கோடி வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த 70 ஏக்கர் நிலத்தின் வளர்ச்சிக்கான செலவு ரூபாய் 1100 கோடியை தாண்டும் என சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here