மம்தா தேவி
கிரிடி மருத்துவமனையின் மாதிரி தாய், குழந்தைகள் நல வார்டில் பிறந்த குழந்தையை பார்க்க சென்றேன். அப்போது குழந்தையின் முழங்காலில் எலிகள் கடித்ததால் ஏற்பட்ட ஆழமான காயங்களை கண்டேன்.

செவிலியர்
குழந்தையானது ஏப்ரல் 29 அன்று பிறந்துள்ளது. அதன் பிறகு குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் MCH இல் அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியுள்ளதாக செவிலியர் ஒருவர் தெரிவித்தார். குழந்தையினை சிறந்த மருத்துவமனையில் அனுமதிக்க செவிலியர் கூறியுள்ளார்.

உடல்நிலை
மே 2ஆம் தேதி இந்த சம்பவம் கிரிதிஹ் சதார் மருத்துவமனையில் நடந்துள்ளது. குழந்தை ஆபத்தான நிலையில் SNMMCH கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விசாரணை
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும், பணியில் இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் முழங்காலில் ஆழமான காயம் காணப்பட்டதால், நோயாளிக்கு சிகிச்சை அளிக்குமாறு நிபுணர் கேட்டு கொள்ளப்பட்டுள்ளார் என அவினாஷ் குமார் கூறினார்.

கடிதம்
காயத்தை குறித்து அவினாஷ் குமாரிடம் கேட்கப்பட்டது. காயத்தை பார்த்த பிறகு எலிகளால் ஏற்பட்டது என்று கூற மாட்டேன் என்றார். சதார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நடவடிக்கை
இந்த சம்பவத்தை குறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. மருத்துவமனை செவிலியர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.