மிகவும் குறைந்த விலையில் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன்

0
91
realme 8 5g

அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வரும் ரியல்மி நிறுவனம் சியோமி, விவோ நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வருவதால் இந்தியாவில் அதிக வரவேற்பை கொண்டுள்ளது. தற்போது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

ரியல்மி நிறுவனம்

நாட்டில் இனிமேல் 5ஜி சாதனங்களுக்கு தான் நல்ல வரவேற்பு இருக்கும் என தெரிகிறது. இந்த காரணங்களால் ரியல்மி நிறுவனம் 5ஜி சாதனங்களை பட்ஜெட் க்கு ஏத்தவாறு அறிமுகம் செய்து வருகிறது. பட்ஜெட் விலைக்கு 5ஜி போனை அறிமுகம் செய்தது ரியல்மி நிறுவனம்.

ரியல்மி நிறுவனம் அண்மையில் 4ஜிபி ரேம் கொண்ட 8 5ஜி போனை ரூ.13,999 விலையில் அறிமுகம் செய்தது. ரியல்மி நிறுவனத்தின் 4ஜிபி ரேம் , 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி விலை ரூ14.999 ஆகவும், 8ஜிபி ரேம் , 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999-ஆகவும் உள்ளது.

ரியல்மி 8 5ஜி அம்சங்கள்

6.5- இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வைத்து அதிக கவனத்தை கொண்டுள்ளது. 1,080×2,400 பிக்சலையும், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் , 20:9 என்ற திரைவிகிதத்தையும் , 600 nits பிரைட்னஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. திரைப்படம், கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு அருமையாக இருக்கும். தரமான டிஸ்பிளே வசதியுடனும் மற்றும் பாதுகாப்புடனும் இந்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

நீண்ட காலம் தாங்கும் சிப்செட்

ஸ்மார்ட்போன்களுக்கு இதயமாக இருக்கும் சிப்செட் நீண்ட வருடங்கள் தாங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு வசதி இதில் உள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும். ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளதால் , மற்ற போன்களை விட தனித்துவமாகவும், கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கும் சிறப்பாக உள்ளது.

கேமரா அமைப்புகள்

மொத்தம் மூன்று கேமராக்கள் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி சென்சார் போன்றவை இடம்பெற்றுள்ளன. 16எம்பி செல்பீ கேமரா வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமெராவானது 48 எம் மோட், புரோ மோட், நைட்ஸ்கேப், ஏஐ ஸ்கேன் , சூப்பர் மேக்ரோ போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இரவு நேரங்களில் கூட இந்த கேமராவில் துல்லியமான புகைப்படங்கள் ,வீடியோக்களை எடுக்க முடியும்.

பேட்டரி அமைப்பு

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் , சரியான பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.இது 18 வாட் குவிக் சார்ஜ் ,கைரேகை சென்சார் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது. ஆப் பயன்பாடுகள், கேமிங்,திரைப்படம் அனைத்தையும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இது உள்ளது. நீண்ட நேரம் பேட்டரி ஆயுளை வழங்கும் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் சிறந்து விளங்குகிறது.

இணைப்புகள் மற்றும் நிறங்கள்

5ஜி, 4ஜி எல்டிஇ, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், வைஃபை 802.11 ஏசி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. சூப்பர்சோனிக் பிளாக் , சூப்பர்சோனிக் ப்ளூ நிறங்கள் இந்த ரியல்மி 8 5ஜி போனில் உள்ளது.

சிறந்த போன்

ரியல்மி 8 5ஜி சாதனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி கேமரா, ஒரு பெரிய டிஸ்பிளே, அழகிய நிறங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளதால் பயனர்கள் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க இது ஒரு நல்ல தேர்வாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here