Rowdy murder! : காவல்நிலையத்தின் பின்புறம் ரௌடி வெட்டிக்கொலை! புதுச்சேரியில் பரபரப்பு!

0
124

கொலை

புதுச்சேரி கருவடிகுப்பத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சரத் பொடிமாஸ். இவர் இன்றைய தினம் அதிகாலை அரியாங்குப்பம் காவல் நிலையம் பின்புறம் அவரது மாமன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் வீடு புகுந்து சரமாரியாக கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பகுதியில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

விசாரணை

இதனை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றினர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு கொலை செய்த கும்பலை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சரத் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

பரபரப்பு

புதுச்சேரியில் காவல் நிலையம் பின்புறம் வீடு புகுந்து ரவுடி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பதட்டம், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here