ஆர். ஆர்.ஆர்
இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை ஒன்றன் பின் ஒன்றாக தகர்த்து வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர்,ராம் சரண் ஆகிய இருபெரும் நட்சத்திரங்கள் இதில் ஹீரோவாக நடித்திருந்தனர்.

சாதனை
ரூபாய் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபீஸில் பல படங்களின் வசூலை முந்தி சாதனை புரிந்தது.

ரஜினியின் 2.0
ஷங்கர் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் 2.0 திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் ஆர்.ஆர்.ஆர் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 819.06 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஆறாவது இடம்
ஆர்ஆர்ஆர் திரைப்படம் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஆறாவது இடத்தில் உள்ளது. தங்கல், பாகுபலி, சீக்ரெட் சூப்பர்ஸ்டார் அதிக வசூல் செய்த முதல் 10 இந்திய படங்களில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.