Pan-Aadhar! : பான்-ஆதார் அட்டை இணைக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம்!

0
154

கடைசி நாள்

ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தவறவிட்டால் பான் அட்டை செயலிழக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பான், ஆதார் அட்டை இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே முடிந்துள்ளது.

அபராதம்

இனி உங்கள் பான் விவரத்தை ஆதார் கணக்குடன் இணைப்பதற்கு அபராதம் செலுத்த வேண்டும். அரசாங்கம் விதித்த காலக்கெடுவை தவறவிட்டதால் உங்களுடைய பான் அட்டை செயலிழந்து போகலாம், அதனை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.

பயனர்கள்

இதனை இணைப்பதற்கு அரசு மூன்று மாதங்களுக்கு நீட்டித்த பிறகும் சில பயனர்கள் அவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை ஆதார் விவரத்துடன் இணைக்கவில்லை.

சிக்கல்

இதனை இணைக்காவிட்டால் வங்கியில் புதிய அக்கௌன்ட் திறப்பது, சொத்துக்களை வாங்குவது, அடையாளத்தை நிரூபிப்பது போன்ற சேவைகளை நீங்கள் பயன்படுத்த முடியாது. இது உங்களுக்கு பல இடங்களில் சிக்கலை ஏற்படுத்தும்.

500 ரூபாய் அபராதம்

ஆதார், பான் எண்ணை இணைக்க தவறும் நபர்களுக்கு ரூபாய் 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் இணைப்பை செய்யும் பட்சத்தில் குறைந்தது 500 அபராதம் விதிக்கப்படும்.

பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதை அறிய

ஆதார் -பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய link-aadhaar-status என்ற இணைப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here