ரஷ்யா
பிப்ரவரி 24 அன்று ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதில் இருந்து 250க்கும் மேற்பட்ட கலாச்சார நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் சூறையாடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலையுயர்ந்த பொருள்
புடினின் படைகள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட பொருள்களில் உக்ரைனில் உள்ள விலையுயர்ந்த சேகரிப்புகளில் ஒன்றான பழங்கால சித்தியன் தங்க பொருள்கள் உள்ளன. இதனை ரஷ்யா ஆக்கிரமித்த மெலிடோபோல் தென்கிழக்கு நகரத்தின் மேயர் இவான் ஃபெடோரோவ் கூறினார்.

சித்தியன் தங்கம்
இது கிமு 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. ஆயுதமேந்திய ரஷ்ய வீரர்களின் குழுவுடன் அருங்காட்சியத்தின் பாதாள அறையில் சேமிக்கப்பட்ட பெட்டிகளை சோதனை செய்துள்ளார். சித்தியன் தங்கம் உக்ரைனில் மகத்தான குறியீடு மதிப்பை கொண்டுள்ளது.

அதிகாரிகள்
ரஷ்ய படைகள் 2,000க்கும் மேற்பட்ட தனித்துவமான கண்காட்சிகளை திருடி உள்ளதாக மரியுபோல் நகர சபை அதிகாரிகள் அறிவித்தனர். உக்ரேனிய அதிகாரிகள் 250 க்கும் மேற்பட்ட கலாச்சார நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன என கூறியுள்ளனர்.