Veerappan brother! : சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மரணம்! 35 ஆண்டுகள் சிறையில் இருந்த மீசை மாதையன்!

0
90

வீரப்பன்

தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலத்தின் போலீசாருக்கு 25 ஆண்டுகளாக கண்ணாமூச்சி காட்டி வந்தவர் வீரப்பன். இவர் 2004 ஆம் ஆண்டு தமிழக அதிரடிப்படையால் சுட்டு கொல்லப்பட்டார்.

வீரப்பனின் அண்ணன் மாதையன்

75 வயதான மீசை மாதையன் என்பவர் சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன். இவர் சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெறப்பட்டவர். மாதையன் கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இவரை விடுதலை செய்ய சில அரசியல் கட்சியினர் கோரிக்கை எழுப்பி வந்தனர்.

உடல்நலம் பாதிப்பு

மாதையன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பரோலில் சென்று திரும்பினார். மீண்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதை தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்பு

மாதையனின் உடல்நிலை குறித்து அவரது மனைவி, உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாதையன் அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here