School! : பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

0
109

பொதுத்தேர்வு

மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கமாக மார்ச் மாதத்தில் தொடங்கும். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வும் இதனைத்தொடர்ந்து நடைபெறும். நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதன் காரணமாக பொதுத்தேர்வுகள் இந்த மாதம் இறுதிவரை நடைபெறுகிறது.

தேதிகள்

12 ஆம் வகுப்புக்கு பொதுதேர்வானது மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்புக்கு மே மாதம் 6ம் தேதி ஆரம்பித்து 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடைசி வேலைநாள்

6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இறுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி கடைசி வேலைநாளாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை

1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here