சரிகா
நடிகர் கமலை திருமணம் செய்துகொண்டு ஐந்து, ஆறு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர் நடிகை சரிகா. பின்னர் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளனர். அவர்களுக்கு பிறந்த மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் சினிமாவில் நடிகைகளாக வலம் வருகின்றனர்.

கஷ்டம்
சரிகா தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கொரோனா காலகட்டத்தில் பணம் இல்லாமல் அதிகம் கஷ்டப்பட்டதாக கூறி உள்ளார். இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

பணம் காலி
ஒரு வருடம் மட்டும் ஒரு பிரேக் ஒன்றை எடுத்துள்ளார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக 5 ஆண்டுகளாக மாறிவிட்டது. நாடகங்களில் நடித்தால் 2000-2700 ரூபாய் வரை கிடைக்கும் என கூறியுள்ளார். ஒருகட்டத்தில் பணம் சுத்தமாக காலி ஆகி விட்டதாக அவர் கூறியுள்ளார்.