Students! : வகுப்பறையில் நடக்கும் அதிர்ச்சி செயல்! ஒழுங்கீன முறையில் நடக்கும் மாணவர்கள்!

0
76

செல்போன்

தகவல் தொழில்நுட்பம் காலத்தின் பரிணாம வளர்ச்சியின் விளைவு அனைவரின் கைகளிலும் சரளமாக செல்போன் பயன்பாடு. குழந்தைகள் கைகளிலும் செல்போன் கொடுக்கப்பட்டதால் பள்ளி பாடத்திட்டத்திற்கும், விளையாடுவதற்கும் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

மாணவர்கள்

பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் மாணவர்கள் வகுப்பறையில் சர்வசாதாரணமாக செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். மிகமோசமான நிலைக்கு பள்ளி மாணவர்கள் சென்று கொண்டிருப்பதை சில சம்பவங்கள் மூலம் அறியலாம்.

அதிர்ச்சி

கடந்த மாதம் அரசு பள்ளி மாணவிகள் பேருந்தில் மதுகுடித்து ஆட்டம் போட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் முன்பாகவே ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்

வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்தும்போது மாணவர்கள் குழுவாக குத்தாட்டம் போட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது. தலைமுடியை ஒழுங்காக வெட்டி வா என கூறியதற்கு ஆசிரியரை அடிக்க செல்வது போன்ற செயல்கள் மாணவர்கள் தடம் மாறி செல்கின்றனரோ என்ற அச்சத்தை உணர்த்துகிறது.

அதிர்வலை

வகுப்பறையில் மாணவர்கள் செல்போன் பார்ப்பதும், மாணவிகள் மடியில் மாணவர்கள் தலை சாய்த்து இருப்பது போன்ற படங்கள் வெளியாகி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ராகிங்

வகுப்பறையில் 3 மாணவர்கள் தாதா போல உட்கார்ந்து இருக்க 10 நபர்கள் தேர்வு அட்டையால் காற்று வீச சொல்லி ராக்கிங் செய்துள்ள வீடியோ எங்கும் பரவி வருகிறது. இதனால் மாணவர்கள் எதிர்காலமானது பாதிக்கப்படுவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here