தளபதி விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது. இந்த படம் தமிழ்நாட்டை தவிர வேறு இடங்களில் பெரிய வசூல் சாதனைகளை படைக்கவில்லை.

தளபதி 66
தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ள நிலையில் அவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் விஜய் மில்டன்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான விஜய் மில்டன் முன்னணி நடிகர் விஜய் குறித்து சுவாரசியமான கருத்தை பேட்டியில் கூறியுள்ளார். விஜய் ஆரம்பத்தில் நடித்த படங்களில் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

விஜய் கூறியவை
விஜய்யின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார் விஜய் மில்டன். தன்னிடம் விஜய் நடிக்க விருப்பமே இல்லை என்றும், இயக்குனராக போவதாகவும் கூறியதாக விஜய் மில்டன் கூறியுள்ளார். தற்போது நடிகர் விஜய் அதை குறித்து யோசித்து கூட பார்க்க முடியாத அளவு பெரிய நடிகர் ஆகிவிட்டதாக விஜய் மில்டன் கூறியுள்ளார்.