Mullivaikkal War! : முள்ளிவாய்க்கால் போர் நினைவு தினத்தில் முதல் முறை சிங்களர்கள் அஞ்சலி!

0
89

போர்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைத்து தமிழ் ஈழம் அமைக்க வலியுறுத்தி, அந்நாட்டு ராணுவத்தினருக்கும், தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையில் போர் நடைபெற்று வந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றது.

தலைவர் வேலுப்பிள்ளை

அந்த ஆண்டு மே 18 ஆம் தேதி தமிழ் ஈழ விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதோடு இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவிற்கு வந்தது.

அறிக்கை

போரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று குவித்ததாக அந்த நாட்டு தமிழர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இறுதிக்கட்ட போரில் சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலி

முள்ளிவாய்க்கால் 13 ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. போரில் உயிரிழந்த தமிழர்கள், தமிழ் கிளர்ச்சியாளர்கள், ராணுவத்தினர், காணாமல் போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பௌத்த துறவிகள், ஹிந்து அர்ச்சகர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் பங்குபெற்றனர்.

நினைவுகூரும் நாள்

போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், மே 18 ஆம் தேதி இறுதிக்கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் துயரத்தை அனுபவித்த ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் நாளாகும் என தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here