Healthy fruits! : உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில பழங்கள்!

0
110

ஆப்பிள்

தூக்கத்தில் நடமாடும் பிரச்சனை உள்ளவர்களுக்கு இரண்டு ஆப்பிள்களை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து பாலில் கலந்து கொடுப்பது சிறந்தது ஆகும். இருதய நோய் உள்ளவர்கள் ஆப்பிளுடன் தேன் கலந்து உண்ணலாம்.

அன்னாசிப்பழம்

இப்பழத்தை உணவுக்கு பின் உண்டால் உடலில் எளிதில் ஜீரணமாகும். அன்னாசி பழத்துடன் தேன் கலந்து உண்டால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சரியாகும். வாந்தி, பித்தம், தாகவறட்சி, காமாலை, மாதவிடாய் கோளாறுகளில் நல்ல பலனை அளிக்க கூடியது.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தப் போக்கு, இன்ஃப்ளூயன்சா போன்றவை தடுக்கப்படுகிறது. உணவு கழிவுகள் குடலில் தங்கி விடாமல் இது தடுக்கிறது. முகப்பரு உள்ளவர்கள் ஆரஞ்சு தோலை தண்ணீர் விட்டு அரைத்து பூசிக்கொள்ளலாம்.

பப்பாளி

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ,பி,சி உள்ளதால் எளிதில் ஜீரணம் ஆக கூடியது ஆகும். இந்த பழம் இளமையும், அழகையும் தரக்கூடியது. பெண்களின் கருப்பை தசை நார்களை சுருங்க செய்ய பப்பாளி உதவுகிறது. இந்த பழம் முறையான மாதவிடாய் போக்கை நிகழ்த்தும்.

திராட்சை

இது உடல் சூடு, கபக்கட்டு போன்றவற்றை போக்கும். மூளை திறன் இதனால் அதிகரிக்கும். வயிறுகளில் ஏற்படும் எரிச்சலை இது அகற்றும். ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு திராட்சை ரசம் நல்ல பலனை அளிக்கிறது.

நெல்லிக்கனி

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க நெல்லிக்கனி சாறு பயன்படுகிறது. நீண்ட ஆயுளை தருவதோடு வாந்தி, குமட்டல் போன்றவற்றுக்கு சிறந்த ஆயுளை தருகிறது. இதனுடைய சாற்றில் தேன் கலந்து கொடுத்தால் சுவாச கோளாறு, விக்கல், பித்த மயக்கம் போன்றவை குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here