Bitcoin Price! : அதிர்ச்சி அளிக்கும் பிட்காயின் விலை! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுமா?

0
70

சரிவு

பணவீக்கத்தின் பாதிப்பால் பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வால் அமெரிக்க டாலர் மதிப்பு ஆதிக்கம் செலுத்தி வரும்நிலையில் பிற நாட்டு நாணயங்கள், கிரிப்டோகரன்சிகள் அதிகளவிலான சரிவை சந்தித்து வருகிறது. பல தொழிலதிபர்கள் கிரிப்டோவுக்கு எதிரான கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

அதிகாரி

பிட்காயின்கள் ஏற்கனவே வீழ்ச்சி அடைந்துவருகிறது. தற்போது பிட்காயின் 8000 டாலர் வரையில் குறையலாம் என முன்னணி முதலீட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸ்காட் மினெர்ட் கூறியுள்ளார்.

பிட்காயின் விலை

திங்கள்கிழமை அன்று ஒரு பிட்காயின் விலை 30,000 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது பிட்காயின் உச்ச விலையில் இருந்து 70 சதவீத வீழ்ச்சியாகும். தற்போது ஒரு பிட்காயின் விலை 30,403.60 டாலர் ஆகும். இந்த அளவுகளில் இருந்து 8000 டாலர் அளவில் சரிந்தால் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான நஷ்டம் ஏற்படலாம்.

பேட்டி

மைனெர்ட் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களை உயர்த்துவதையும், பணவியல் கொள்கையை மையமாக வைத்தும் திங்கள்கிழமை அன்று சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கிரிப்டோகரன்சி விலை

பிட்காயின் – 30,403.60 டாலர்

எதிரியம் – 2,069.56 டாலர்

டெதர் – 1.00 டாலர்

பினான்ஸ் – 334.02 டாலர்

USD காயின் – 1.00 டாலர்

ரிப்பிள் – 0.43 டாலர்

கார்டானோ – 0.55 டாலர்

பினான்ஸ் USD – 1.00 டாலர்

சோலானோ – 53.87 டாலர்

டோஜ்காயின் – 0.0876 டாலர்

போல்காடாட் – 10.65 டாலர்

அவலான்சி – 31.89 டாலர்

வார்ப்டு பிட்காயின் – 30,390.42 டாலர்

ட்ரான் – 0.07612 டாலர்

ஷிபா இனு – 0.00001240 டாலர்

டாய் – 1.00000 டாலர்

பாலிகான் – 0.69630 டாலர்

லைட் காயின் – 72.87 டாலர்

க்ரானோஸ் – 0.1991 டாலர்

UNUS Sed – 4.9100 டாலர்

நியர் ப்ரோடோகால் – 6.370 டாலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here