Indrani Mukerjea! : இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!

0
172

இந்திராணி முகர்ஜி

பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பை வகித்து வந்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவர் அவரது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா பாராவை கொலை செய்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கொலை

பீட்டர் முகர்ஜிக்கும், அவருடைய முன்னாள் மனைவிக்கும் பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை ஷீனா போரா காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறியுள்ளனர். கைதான பின்னர் மும்பையில் உள்ள பைகுல்லா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டவை

சிபிஐ கூறுகையில், இந்திராணி முகர்ஜி அவருடைய மகளை கொன்றவர். இதனை சாதாரண வழக்காக கருத முடியாது என்பதால் நீதிமன்றத்தின் கருணையை பெறுவதற்கு தகுதி இல்லை என கூறியது. இந்திராணி வெளியே வந்தால் சாட்சியங்களை அழித்து தலைமறைவாக கூடும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

உத்தரவு

மீண்டும் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திராணி முகர்ஜி சிறையில் 6.5 ஆண்டுகளை கழித்துள்ளதால் அவருக்கு பிணை வழங்கப்படுகிறது என உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here