விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஆளுநர்
இந்த வழக்கில் விடுதலை அளிக்கக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு ஆளுநர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் இருக்கிறார் என வாதிடப்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை முடிவெடுத்தபின் ஆளுநர் முடிவெடுக்க அவசியம் இல்லை என தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் பேசியவை
பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க காலதாமதம் ஏன்? மத்திய அரசு முடிவை அறிவிக்கவில்லை என்றால் நாங்கள் முடிவை அறிவிக்க வேண்டியது இருக்கும் என தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை குறித்து அமைச்சரவை முடிவினை எடுத்தபின் ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தால் கூட்டாட்சி தத்துவத்திற்கு என்ன அர்த்தம் என கேட்டுள்ளார்.

சட்டம்
அனைவரும் அரசியல் சாசனத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும், அமைச்சரவை முடிவுக்கு முரணாக ஆளுநர் ஏன் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.