Perarivalan! : அதிரடி தீர்ப்பினை எடுத்துள்ள சுப்ரீம் கோர்ட்! பேரறிவாளன் விடுதலை!

0
107

படுகொலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு பிறகு பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்.

குற்றம்

பேரறிவாளன் உட்பட 7 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 7 நபர்களையும் விடுதலை செய்ய கோரி ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் வெற்றியளிக்கவில்லை.

மனுதாக்கல்

இந்த வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். 7 நபர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் கொண்டுவந்தது. இதன் மீது எந்த தீர்மானமும் எடுக்காமல் இருந்துள்ளார்.

தீர்ப்பு கூறியவை

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தாமதம் செய்தது தவறான செயலாகும். 142 ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 161 ஆவது சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் உள்ளன என்றும், அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு

ராஜீவ் கொலை கைதிகள் வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது. நீதிபதிகள் மத்திய அரசின் நிலைப்பாட்டையோ, தமிழக கவர்னரின் அதிகார வரம்பையோ கருத்தில் கொள்ளாமல் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here