Police officer! : சிறுமியின் மீது கொடூர செயலை செய்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

0
126

மர்ம நபர்கள்

உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை ஏப்ரல் 22 அன்று போபாலுக்கு கடத்தப்பட்டு நான்கு மர்ம நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியினை கிராமத்தில் இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பித்து சென்றுள்ளனர்.

புகார்

இதனை குறித்து சிறுமி அவரது தந்தையிடம் கூறினார். அந்த சிறுமி உறவினருடன் லலித்பூரில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க சென்றுள்ளார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சிறுமியை மறுநாள் காவல் நிலையத்திற்கு வருவதற்கு சொன்னார்.

அதிகாரி

காவல் நிலைய பொறுப்பாளர் அதிகாரி திலக்தாரி சரோஜ் சிறுமியை காவல் நிலையத்திற்குள் இருந்த அறைக்குள் அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுமியை மீண்டும் அதிகாரி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

வழக்கு

குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி திலக்தாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த மர்மநபர்களை போலீசார் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here