Tamil Actress Updates 2022: சூப்பர் ஸ்டார் “ரஜினி”யின் ஸ்டைல், கெத்து, மாஸ் இவற்றை காப்பி நடிக்கும் நடிகர்கள்..! இதோ ……..

0
68
rajini

நடிகர் ரஜினியின் ஸ்டைலை காப்பி அடிக்கும் கதாநாயகன்கள். ‘சச்சின்’ படத்தில் தளபதி விஜய் அந்த வித்தையை செய்ததாக ரசிகர்கள் கூறிருந்தனர். ஆனால் ரஜினி அதனை 1989 ல் ‘மாப்பிள்ளை’ படத்தில் செய்திருந்தார்.

ரஜினி

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் மாஸா, கெத்தா,ஸ்டைல அசத்தி வருபவர். இவர் முதல் படம் கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த ஜானி, தில்லு முள்ளு, முள்ளும் மலரும், போன்ற படங்கள் இவரை பெரிய அளவில் உயாத்தியது.

சூப்பர் ஸ்டார்

அதன் பின் தமிழ் சினிமா இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பட்டத்தை கொடுத்தது. இவர் இவ்வளவு ரசிகர்களை சம்பாதிக்க காரணம் இவரது ஸ்டைல் தான். ஆனால் இவருடைய ஸ்டைல்லை காப்பி அடித்து பல நடிகர்கள் பெரிய ஆள் ஆகலாம் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். தற்போது சின்ன நடிகர்கள் எல்லாருமே ரஜினியை காப்பி அடித்து நடிக்கிறார்கள். இதில் அதிகம் காப்பி அடிப்பது அவரது மருமகன் தனுஷ் தான்.

தனுஷ்

ரஜினி நடித்த “முரட்டுகாளை” என்ற படத்தில் அவர் ‘சீவிடுவேன்’ என்ற டயலாக் பேசியுள்ளார். அதை போல் தனுஷ் “மாரி” என்ற படத்தில் ‘செஞ்சிடுவேன்’ எனவும் “ஆடுகளம்” படத்தில் ‘கொண்டேபுடுவேன்’ எனவும் கொஞ்சம் மாற்றி பேசியிருப்பார். ரஜனி நடித்த “முள்ளும் மலரும்” என்ற படத்தில் ‘கெட்ட பையன் சார் இந்த காளி’என்று ரஜினி பேசியிருப்பார். அதனை போல் “வேலையில்லா பட்டதாரி” படத்தில் தனுஷ் ‘நான் கொஞ்சம் பேட் பாய் சார்’ என பேசியிருப்பார்.

சூர்யா

ரஜினி நடித்த “மாப்பிள்ளை” என்ற படத்தில் சிகரெட்டை வாய்க்குள்ளிருந்து எடுப்பார். அதனை போல் “அஞ்சான்” படத்தில் சூர்யா குச்சியை வாய்க்குள்ளிருந்து எடுப்பார். முதலில் சிகெரெட் தான் இருந்துள்ளது ரசிகர்கள் கேட்டு போவார்கள் என்று சூர்யா தான் மாத்த சொல்லிருக்கிறார்.

விஜய்

அருணாச்சலம் என்ற படத்தில் பேக்கை திருடி விட்டு ஓடும் திருடனை
கோலி சோடா குடித்து கொண்டு பாட்டிலை தூக்கி அடிப்பார் ரஜினி. அதை போல் கில்லி படத்தில் விஜய் கோகோகோலா குடித்து கொண்டு பாட்டிலை தூங்கி அடிப்பார். பின் ரஜினி சிவாஜி படத்தில் பபுல்கம் தூக்கி ஏறிந்து வாயில் பிடிப்பார்.

விவேக்

ரஜினி நெய்த படையப்பா படத்தில் சட்டையை உரசி நெருப்பு வர வைத்திருப்பர் ரஜினி. அதனை போல் பரமசிவன் என்ற படத்தில் விவேக் பண்ணிருப்பார்.

வடிவேலு

சட்டையை உரசி தீ வருவது இங்கிலீஷ்காரன் என்ற படத்தில் வடிவேலு பண்ணிருப்பார்.

அஜித்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் படங்களின் ஸ்டைலை அப்படியே செய்து நடித்த நடிகர்களும் உண்டு. ரஜினி நடித்த அதே படங்களின் பெயர்களை வைத்து நடிப்பவர்களுக்கு உண்டு. அதில் ஒரு படம் அஜித் நடித்த “பில்லா” மற்றும் இன்னொரு படம் ‘தில்லு முள்ளு’ படம் ஆகும்.

சிம்பு

நடிகர் சிம்பு ரஜினியின் மிக பெரிய ரசிகன் அதனால் அவரது படத்தில் ரஜினியின் ஸ்டைலை வைப்பார்.

ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் ரஜினியின் பக்தன் இவர் எல்லா படங்களிலும் ராஜியை போலவே தான் நடிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here