தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆண்டிற்கு ஒருபடம் நடிப்பேன் என நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.
டாப்ஸி
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளி வந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார். இவர் பல மொழி படங்களில் ஹீரோயின்னாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அனபெல் சுப்ரமணியம்
தற்போது இவர் நடிப்பில் உருவான “ஹசீன் தில்ருபா” படம் வெளியானது. இவர் தமிழில் க விஜய் சேதுபதியுடன் “அனபெல் சுப்ரமணியம்” என்ற படத்தை நடித்துள்ளார்.
பேட்டி
இந்த நிலையில் டாப்ஸி தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், நான் படம் நடிக்கும் போது கதைகளை தேர்வு செய்வதில் தவறு செய்து விட்டேன் என கூறினார்.
ரசிகர்கள்
தற்போது நான் எந்த மாதிரி படங்களைப் அதிகமாக பார்கிறேனோ ,அதை தேர்வு செய்து நடிக்க தொடங்கினேன். அது மிகவும் வரவேற்பை பெற்று தந்தது. இருந்தாலும் ஒரு ரசிகையின் அன்பு மாறவில்லை.
சினிமா
படத்தின் கதையை கேட்கும் போது ரசிகர்களாக என்னை நினைத்து கொண்டு நடிக்கலாமா ? நடிக்க வேண்டாமா? என யோசித்து முடிவு எடுப்பேன். இந்தி சினிமாவில் தொடர்ச்சியாக நடித்துக் வந்தாலும் தமிழ் சினிமாவை ஒதுக்கவில்லை.