ஆய்வு
சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தை அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை, அளிக்கப்படும் உணவு குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.
செய்தியாளர்களிடம் கூறியது
கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 92, 212 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகரித்தபோதிலும் மருத்துவமனைகளில் 8,832 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலோசனை
தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை நாட வேண்டியதில்லை என்றும், லேசான அறிகுறி உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்படுகிறது.

தடுப்பூசி
கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஓமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதை உணர வேண்டும் என கூறினார்.
தொற்று குறைவு
முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தொற்று பரவல் குறைத்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், அடுத்த வாரம் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.