Monday, May 23, 2022
HomeTamil Newstamil news: நெல்லை வங்கியில் தீ விபத்து...!! போலீசார் விசாரணை .......

tamil news: நெல்லை வங்கியில் தீ விபத்து…!! போலீசார் விசாரணை …….

வங்கியில் தீ விபத்து

நெல்லை மாவட்டத்தில் ஸ்ரீ்புரம் சிவசக்தி தியேட்டர் போகும் வழியில் “சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி” நடந்து கொண்டு வருகிறது. நேற்று மதியம் 1 மணி அளவில் வங்கியில் தீ பிடித்தது. அதனை பார்த்த வங்கியின் ஊழியர்கள் பதறியடித்து வெளியே வந்தனர்.

பாளையங்கோட்டை தீயணைப்பு துறைக்கு தகவல்

பின் கட்டிடத்தில் தீ பயங்கரமாக பத்தி எரிந்து கட்டிடம் முழுவதும் புகையாக காணப்பட்டது. அதன் பின் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தன. அவர்கள் மூன்று வண்டியில் வந்து தீயை அணைக்கும் பணியில் இறங்கியுள்ளன.

தீயை அணைக்கும் பணி தோல்வி

தீயை அணைக்க கட்டிடத்தின் சன்னல்களை உடைத்து தண்ணீரை ஊற்றினர் ஆனால் தீ அணையவில்லை. பின் பொக்லைன் என்ற இயந்திரத்தை வரவழைத்து ஜன்னல் முழுமையாக உடைக்கப்பட்டது. அதன் பின் அதிகமான புகையின் காரணமாக தீயணைப்பு வீரர்களுக்கு பணியில் ஈடுபட முடியவில்லை.

ஆக்சிஜன் கருவி

பின் இன்னும் இரண்டு தீயணைப்பு வாகனத்தை வரவைத்து தீயை அணைக்கும் வேலையில் இறங்கினர். பின் தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் கருவியை பொருத்தி தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன் பின் மூன்று மணி நேரம் கஷ்ட பட்டு தீயை அணைத்தனர். ஆனால் முக்கியமான பொருட்கள் மற்றும் ஆவணங்கள், கம்ப்யூட்டர் என எல்லா பொருட்களும் நாசமடைந்தன.

பரபரப்பு

அதனை தொடர்ந்து நெல்லை உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் போலீஸ்
இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments