சீனாவில் குழந்தைகள் பிறப்பது ஐந்து ஆண்டுகளாக குறைந்து வருகிறது. 2021ல் மட்டும் மக்கள் தொகை ஆறு லட்சம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளன.
சீனா
சீனாவில் 2021ம் ஆண்டு மக்கள் தொகை அறிக்கையைஏக் யில் புள்ளிவிபரத் துறை வெளியிட்டுள்ளது. 2021ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடி 26 லட்சமாக அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை
2020ல் 141 கோடி 20 லட்சமாக இருந்தது. குழந்தை பிறப்பு விகிதம் ஒரு கோடி ஆறு லட்சமாக குறைந்துள்ளன. ஐந்து வருடமாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ‘சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது பொருளாதாரத்தின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கும்.
ஜியாங்ஸி மாகாணங்கள்
வேலை செய்யும் திறமை உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெறுவோரின் விகிதத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். ஜியாங்ஸி மாகாணங்கள் குழந்தை பிறப்பை அதிகரிக்கும் நோக்கில் திருமணம், மகப்பேறு, குழந்தைகளை பராமரிப்பு ஆகியவற்றுக்கு விடுப்பு நாட்களை அதிகரித்துள்ளது.
சலுகை
சீனாவில், கல்வி, வீட்டு வசதி ஆகியவற்றிற்கான செலவுகள் அதிகரித்திருப்பதால் குழந்தை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனை தொடர்ந்து மூன்று குழந்தைகள் பெறுவோருக்கு சலுகைகளை சீன அரசு அறிவித்துள்ளன.