ஜல்லிக்கட்டு
இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு கார் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் இன்று காலை தொடங்கியது.
ஒத்திவைப்பு
அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று ஜல்லிக்கட்டு அங்கு நடைபெறுகிறது.

சான்றிதழ்
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ள காளை உரிமையாளர்கள், வீரர்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியை காண்பதற்கு 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் காயங்கள் ஏற்பட்டால் மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.