தனக்கு அறியாதவருக்கும் தேடிப்போய் உதவி செய்பவர் தான் எம்.ஜி.ஆர். மனிதநேயம் என்று சொன்னால் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர். என்று சொன்னால் மனிதநேயம்.
மனிதநேயம்
மனிதநேயம் என்றால் சாதி, மதங்களை கடந்து யார் என்று தெரியாத மனிதர்களுக்கு செய்யும் உதவி. அப்படி நம் நாட்டில் வாழ்ந்த புரட்சித்தலைவர் பிறந்த நாள்தான் இன்று மனிதநேய நாள் (ஜனவரி 17)
கலியுக வள்ளல்
மனிதநேயத்தின் கலியுக வள்ளல் வாழ்ந்தார் என்பதற்கு சில விஷயங்களை பதிவிடுகிறேன். 1961-ம் ஆண்டு கோடம்பாக்கம் என்ற ரெயில்வே பாலம் முடிருந்த நேரத்தில், கன மழையில் உடல் முழுவதும் ஈரமாக , அவர் கை வண்டியை இழுக்க இயலாமல் ஒரு முதியவர் நடுங்கிய காட்சியை காரிலிருந்து பார்த்த புரட்சித்தலைவருக்கு கண்கள் கலங்குகிறது.
மழைக்கோட்டு
இதன் காரணமாக உடனடியாக, தமிழகம் முழுவதுமுள்ள எல்லா ரிக்ஷா தொழிலாளர்களுக்கும் மழைக்கோட்டு கொடுக்க ஏற்பாடு செய்தார். விலை அதிகமான பிளாஸ்டிக் சீட்டில் உள்ள மழை கோட்டை 26 ஆயிரம் மக்களுக்கு கொடுத்தார்.
அறிஞர் அண்ணா
தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா வெளிமாநிலத்தில் சிகிச்சை எடுத்து கொண்டு திரும்பி வந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்தநாயகி, ‘முதல்-அமைச்சருடைய சிகிச்சைக்கு எவ்வளவு பணம் செலவாகியுள்ளது. அது அவருடைய பணமா? அரசு பணமா? இல்ல கட்சி பணமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
எம்.ஜி.ஆரின் மனிதநேயம்
அதற்கு பதிலினை அளித்த அண்ணா, ‘‘என் சிகிச்சைக்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரமும் என் தம்பி எம்.ஜி.ஆர்.தான் கொடுத்தார். கட்சியும் செலவழிக்கவில்லை, இது அரசு பணமும் இல்லை ’ என்று விளக்கம் கொடுத்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் மனிதநேயம்.
ராமாயி அம்மாள்
தனக்கு தெரியாதவருக்கு தேடி போய் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர். ராமாயி அம்மாள் கொடிகாத்த குமரன் என்று பெருமையாக செல்லப்படும் திருப்பூர் குமரனின் மனைவியான ராமாயி அம்மாளை கட்சி மறந்தே போனது. அவர் வறுமையில் இருப்பதை அறிந்த புரட்சித்தலைவர் அவரை உடனே நேரில் சந்தித்து ரூ.50 ஆயிரம் அளித்துள்ளார். அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தார்.
புரட்சித்தலைவர்
புரட்சித்தலைவர் இறந்ததும் ராமாயி அம்மாள், ‘என் பிள்ளை இறந்த துயரத்தை அனுபவிக்கிறேன். பெற்றதாய்க்கு வயிறு வாடாமல் உணவும், உடையும் கிடைக்குமாறு செய்வதுதான் பிள்ளையின் கடமை. என் பிள்ளை எம்.ஜி.ஆர்.தான்’ என்று கதறி அழுதார்.

உதவி
உதவி செய்வதற்கு புரட்சித்தலைவர் கணக்கும் பார்ப்பதே இல்லை. தமிழகம் முழுவதுமுள்ள ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்குவதற்காக ரூ.5 லட்சம் செலவளித்துள்ளார். அந்த காலத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.56 தான். அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட தங்க வாளை பாகிஸ்தான் படையெடுப்பின்போது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்
நிவாரணம்
தனுஷ்கோடி புயல் வந்த போது ரூ.1 லட்சம், சீன படையெடுப்பின்போது ரூ.98 ஆயிரம், பாகிஸ்தான் படையெடுப்பின்போது ரூ.100 ஆயிரம், அவ்வை இல்லத்துக்கு ரூ.40 ஆயிரம், கலைவாணர் என்.எஸ்.கே. வீடு ஏலத்திலிருந்து மீட்டுக்கொடுத்தது ரூ.50 ஆயிரம், சென்னை ஆந்திர மகிளா சபா ஈஸ்வரபிரசாத் அங்கஹீன குழந்தைகள் பராமரிப்புக்கு ரூ.50 ஆயிரம் என்று கணக்கு பார்க்காமல் அள்ளியள்ளி கொடுத்துள்ளார்.
மக்கள் மனதில் புரட்சித்தலைவர்
அன்றைய காலத்தில் புரட்சித்தலைவர் கொடுத்த பணத்துக்கு தங்கமோ, இடமோ வாங்கியிருந்தால் இன்றைய மதிப்பில் ஆயிரம் கோடிகளை தாண்டியிருக்கும். ஆனால், அவர் ஏழை-எளிய மக்கள் மனதில்தான் தன்னுடைய பணத்தை கொடுத்து வைத்துள்ளார்.
பாடல் வரி
“தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்…’ ‘உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்” என்ற பாடல் தான் என்னை புரட்சித்தலைவரிடம் கொண்டு சேர்த்தது.
பொதுவாழ்க்கையை அமைத்துக்கொள்
பொதுவாழ்க்கையை அமைத்துக்கொள்’ என்ற புரட்சித்தலைவரின் ஆலோசனையின் வெளிப்பாடு தான், மனிதநேயம்
மத்திய-மாநில அரசு
மத்திய-மாநில அரசு பதவிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியில் இருக்கிறார்கள். பயிற்சி பெற்ற 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதிவருகிறார்கள் நமக்கு வழிகாட்டிய புரட்சித்தலைவர் பிறந்தநாளை, மனிதநேய நாளாக உலகம் கொண்டாடி மகிழ்வார்கள்.
.