அக்ஷரா ரெட்டி
கொச்சி விமான நிலைய வழியாக 20 கிலோ தங்கம் கடத்த பட்ட வழக்கு தொடர்பாக மாடல் அழகி அக்ஷரா ரெட்டியிடம் அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விமான நிலையம்
2013 ம் ஆண்டு கொச்சி விமான நிலையம் வழியாக கடத்தப்பட்ட 20 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முக்கிய நகை வியாபாரிகளுக்கு தங்கம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தங்கம் கடத்தல்
கடத்தல் வழக்கில் வடகிரியை சேர்ந்த பைல்ஸ் என்பவரை கைது செய்த நிலையில் மாடல் அழகியான அக்ஷரா ரெட்டிக்கு தொடர்பு உள்ளதாக கூறபடுகிறது. இந்நிலையில் அக்ஷரா ரெட்டியை தொடர்பு கொண்ட கோழிக்கோடு அமலாக்க துறையினர் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.