Tata Motors : டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த அல்ட்ரோஸ் DCT!

0
90

அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவர்களது அல்ட்ரோஸ் DCT வேரியண்டை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய டாடா அல்ட்ரோஸ் DCT விலை ரூபாய் 8.10 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 9.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எஞ்சின்

அறிமுகம் செய்யப்பட்டது முதல் இரண்டு ஆண்டுகளுக்கு டாடா அல்ட்ரோஸ் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும் இது DCT கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும். புதிய DCT கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் வழங்கப்பட்டுள்ளது.

திறன்

புதிய டாடா அல்ட்ரோஸ் DCT புதிய 6 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் உடன் 86 ஹெச்பி திறன் வழங்கும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

விலை விவரம்

டாடா அல்ட்ரோஸ் XM+ DCT விலை ருபாய் 8.10 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் XT DCT விலை ரூபாய் 8.60 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் XT DCT டார்க் எடிஷன் விலை ரூபாய் 9.06 லட்சம் ஆகும்.
டாடா அல்ட்ரோஸ் XZ DCT விலை ரூபாய் 9.10 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் XZ (O) DCT விலை ரூபாய் 9.22 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் XZ+ DCT விலை ரூபாய் 9.60 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் XZ+ DCT டார்க் எடிஷன் விலை ரூபாய் 9.90 லட்சம்

சிலிண்டர்

புதிய 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் NA பெட்ரோல் எஞ்சின் மூலம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்த எஞ்சின் ஆனது 86 ஹெச்பி திறன், 113 நியூட்டன் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த புதிய மாடல் 20 கிலோ வரை எடை அதிகரித்து காணப்படுகிறது.

நிறுவனம்

புதிய DCT கியர்பாக்ஸ் இந்திய வானிலை, சாலைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக உருவாகி இருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது கியர்பாக்ஸ் ஷிஃப்ட்-பை-வயர் தொழில்நுட்பத்தை கொண்டு உருவாகியுள்ளது.

அம்சங்கள்

இந்திய சந்தையில் புதிய டாடா அல்ட்ரோஸ் DCT மாடல் XM+, XT, XZ,XZ(O), XZ+ வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய DCT மாடல் அம்சங்கள் அதன் மேனுவல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here