சோதனை
டாடா மோட்டார்ஸ் நீண்ட காலமாக டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் சோதனையை இந்தியாவில் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுகம்
ஏப்ரல் 20 ஆம் தேதி இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் கார் 136PS மின்சார மோட்டாரை கொண்டுள்ளது. இந்த மோட்டார் 7PS அதிக சக்தி வாய்ந்தது.

புதிய தோற்றம்
எலக்ட்ரிக் எஸ்யூவி க்கு புதிய தோற்றத்தை அளிக்க நிறுவனம் 16 இன்ச் டூயல் டோன் டைமண்ட்-கட் அலாய் வீல்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும் என டாடா எதிர்பார்க்கிறது.

அம்சங்கள்
இந்த காரில் ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் போன்ற பல அம்சங்கள் உள்ளன. பாதுகாப்புக்கென முன்பக்கத்தில் இரண்டு ஏர்பேக்குகள், கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் காணப்படுகிறது.

சார்ஜ்
இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ வரை ஓட்ட முடியுமாம். இந்த பவர்டிரெய்ன் 125 பிஎச்பி பவரையும், 245 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டதாக காணப்படுகிறது.