பள்ளி
துறையூரை அடுத்த தனியார் பள்ளியில் சிக்கத்தம்பூர் பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனும் இவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
புகார்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் பள்ளி மாணவனுடன் திடீரென மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறித்து மாணவனின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகாரினை அளித்தனர்.

சந்தேகம்
மகனை கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் விடுத்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர்.
செல்போன்
ஆசிரியை பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து போலீசார் சோதனை செய்த போது காணாமல்போன மாணவன் திருச்சி புதூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

திருமணம்
அங்கு வந்த போலீசார் இருவரையும் துறையூர் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரியரும், மாணவனும் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கைது
பள்ளி மாணவர் 18 வயதுக்கு குறைவானவர் என்ற காரணத்தால் சர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியரை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

பரபரப்பு
அந்த மாணவன் திருச்சியில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டான். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அவரிடம் படித்த மாணவனையே திருமணம் செய்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.