Telecommunications! : ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!

0
53

சேவைகள்

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இந்திய அலைவரிசை நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்கள் அவர்களுக்கென தனி வாடிக்கையாளர்களையும், அவர்களுக்கான சேவைகளையும் வழங்கி வருகிறது.

கட்டணம்

இந்தியாவில் பெரிய வலைப்பின்னலை கொண்டிருக்கும் இந்த நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாதம் ப்ரீபெய்ட் கட்டணத்தை 20-25 சதவீதம் வரை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. தற்போது இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மேலும் 10-12% வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறியவை

கட்டண விலைகள் அதிகரித்திருந்தாலும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4 கோடி புதிய பயனாளர்களை இணைப்பார்கள். 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டணத்தை உயர்த்தியதில் குறைந்த அளவிலான நிதி நெருக்கடியையே சந்தித்தன. இது மீண்டும் கட்டண உயர்வுக்கு காரணமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here